புலிகள் மீதான தடை தொடர்பில் இலங்கை அரசின் வர்த்தமானி வெளியானது
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பட்டியலை புதுப்பித்து நேற்று (மே 30) புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் இந்த "அதி விசேட வர்த்தமானி" (Gazette Extraordinary) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தற்போது 15 அமைப்புகள் மற்றும் 217 தனிப்பட்ட நபர்கள் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் 15 அமைப்புகள் மற்றும் 222 நபர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர்.
புதிய பட்டியலில் விடுதலைப்புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamil Rehabilitation Organisation - TRO), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து தடைப்பட்டவையாகவே இருந்து வருகின்றன.
இந்த நடவடிக்கை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 1 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam