ரூபாவைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம்! குறையும் கையிருப்பு
சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இந்த வருடத்தில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். எனினும், தற்போது 6.5 பில்லியன் டொலர்களே கையிறுப்பில் உள்ளது.
கையிருப்பு
இந்தநிலையில், மாதத்திற்கு 250 முதல் 300 மில்லியன் டொலர் வரை சேமிப்பது இலகுவானதல்ல. 2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின்போது வெளிநாட்டு கையிருப்பு 6100 மில்லியன் டொலராக இருந்தது.
அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புக்காக மூன்று காலாண்டுக்கான நிதி ஒத்துழைப்பு வழங்கியது.

இந்த ஒத்துழைப்புக்கு அமைய வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது 7,100 மில்லியன் டொலராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இன்று 6591 மில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளது. எனவே இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன.
கையிருப்பைக் கொண்டு ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க இந்த டொலர்களைப் பயன்படுத்துகிறார்கள். கையிருப்பைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் இந்தச் சுமை அரசாங்கத்தின் மீதே விழும் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை