ரஷ்யா மேலதிகமாக 300,000 வீரர்களை திரட்டத் திட்டம்: உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யா, உக்ரைன் போருக்காக செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேலதிகமாக 300,000 இராணுவ வீரர்களைத் திரட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆட்சேர்ப்பு நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய நகரங்களைத் தவிர்த்து ரஷ்யாவின் தொலைதூரப் பிராந்தியங்களைக் குறிவைத்து இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும், நடப்பு ஆண்டில் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக 27 பில்லியன் டொலர்கள் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan
8 ஆண்டுகள் காதல், லிவ்-இன் உறவு.. திருமணம் செய்துகொண்ட அர்ஜுன் ராம்பால் - கேப்ரியல்லா டெமெட்ரியஸ் Cineulagam