ரணிலுக்கு ஆதரவு வழங்கும் மொட்டுக் கட்சியின் கூட்டம் நாளை ஜனாதிபதி மாளிகையில்:திரைமறைவில் ராஜபக்சவினர்
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்காக நாளைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை முற்பகல் 9 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
எது எப்படி இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் மகிந்த, பசில் மற்றும் நாமல் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை. எனினும் திரைமறைவில் இருந்து இவர்கள் அதற்கான சில வேலைகளை செய்துள்ளதாக பேசப்படுகிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
