இந்திய இழுவை படகுகளால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பல மில்லியன் ரூபாய்கள் சேதம்
இலங்கை கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்களுக்கு இந்திய இழுவைப் படகுகளால் ஏற்பட்ட சேதம் 700 மில்லியன் ரூபாய்கள் என இலங்கையின் கடற்றொழில் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடற்றொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வளமான உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட கடல் பகுதிகளில் வேட்டையாடுதல் தடையின்றி தொடர்கிறது. இதில் இறால், கடல் வெள்ளரி, சங்கு மற்றும் முத்து சிப்பி போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல் இனங்களும் அடங்கும்.
கன உலோக அமைப்புகள்
முன்னதாக, இந்திய அமைச்சருக்கு அனுப்பப்பட்ட தகவல்களின்படி, தமிழகத்தின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களிலிருந்து 1,000இற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) கடந்து வருகின்றன.
இலங்கைக் கடற்பரப்பில், கரையோரம் அருகில் வரும், இந்த படகுகளில், இரண்டு கன உலோக அமைப்புகள், கடற்றொழில் வலையின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளன.
உயிர் அச்சுறுத்தல்
அவை, கடற்பரப்பைத் முழுமையாக துடைக்கின்றன. அமைச்சின் ஆதாரங்களின்படி, இந்த இழுவைப் படகுளின் செயற்பாட்டால், ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளும் பிடிக்கப்படுகின்றன.
இதேவேளை, இலங்கை கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகள் இருக்கும்போது, இலங்கை கடற்றொழிலாளர்கள், உயிர் அச்சுறுத்தல் காரணமாக கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |