கிழக்கு ஆபிரிக்க “கானா“வில் கோர விபத்து! 17பேர் பலி!
சுரங்க பணிகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு பாரஊர்தியின் மீது உந்துருளி ஒன்று மோதியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் நாடான கானாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தைப்பகுதி ஒன்றில் குறித்த பாரஊர்தி சென்றபோது வேகமாக வந்த உந்துருளி அதனுடன் மோதியுள்ளது.
Just in:
— YFM Takoradi (@Y979FM) January 20, 2022
Mining explosion has destroyed a whole community along the Bogoso - Wasa Akropong stretch.
Very disturbing scenes.
Thread: 1/2 pic.twitter.com/G8rbp9wKvn
இந்த விபத்தின்போது பாரஊர்தி தீப்பற்றிதை அடுத்து அதிலிருந்த வெடிமருந்து பாரிய சத்தத்துடன் வெடித்தது.
இந்த கோர வெடி விபத்தின்போது அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின.
இந்த வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.





