நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் பார ஊர்தி பேருந்துடன் மோதி விபத்து!
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் டொபாஸ் தோட்டப் பகுதியில் கொள்கலன் லொறியொன்று முன்னால் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(30.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொள்கலன் லொறி, ஆபத்தான பெரிய வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்ததால், எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
ஆபத்தான வளைவுகள் நிறைந்த இந்த வீதியில் பாரிய வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்புடனும் வாகனங்களைச் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.