பூண்டுலோயா பிரதான வீதியில் லொறி விபத்து - ஒருவர் காயம்
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை பூண்டுலோயா - தலவாக்கலை பிரதான வீதியில் பேர்லண்ஸ் பகுதியில் லொறி வீதியை விட்டு விலகியதால் நேர்ந்துள்ளதாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கும் போது, வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி லொறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக லொறியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
