கிண்ணியாவில் வடிகானுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி!
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்றையதினம்(5.5.2026) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, லொறியின் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
விபத்து
மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கி பொதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறி பயணித்துக்கொண்டிருந்த போது, அதன் இயக்கச் சக்கரம் (Steering) திடீரென இறுகியதால் (Lock), சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
இதன் காரணமாக வீதியை விட்டு விலகிய லொறி, அருகில் இருந்த வடிகானுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தின் போது லொறியில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், வாகனத்திற்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.