தம்புள்ளை - குருநாகல் வீதியில் இரு லொறிகள் மோதி விபத்து: சாரதிகள் படுகாயம்
தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில், மெல்சிரிபுர பிரதேசத்தில் இரண்டு சிறிய லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று (04.05.2026) மெல்சிரிபுர பகுதியில் இரண்டு சிறிய ரக லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதுடன், மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் வீதியிலேயே கவிழ்ந்துள்ளன.
இந்த கோர விபத்தில் இரண்டு லொறிகளினதும் சாரதிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.
சிகிச்சை
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் காரணமாக இரண்டு வாகனங்களும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளன.
விபத்து நடந்த வேளையில் குறித்த வீதியூடான போக்குவரத்துச் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri