அநுரவின் நகர்வு வடமாகாணத்தை நோக்கி தான்: கந்தசாமி பிரபு தெரிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Independent Writer Feb 11, 2026 12:31 PM GMT
Report

வடக்கில் ஜனாதிபதியால் பல வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தி தான் அதிகமாக கிடைக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(10.02.2026) வெல்லாவெளியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரத்தில் யானை வேட்டையின் பயங்கர சம்பவங்கள் அம்பலம்

அநுராதபுரத்தில் யானை வேட்டையின் பயங்கர சம்பவங்கள் அம்பலம்

மில்லியன் கணக்கான பணம் ஒதுக்கீடு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் கடந்த வருடம் 176 திட்டங்களுக்கு 151 மில்லியன் ரூபாய் நிதியை நாம் ஒதுக்கீ செய்திருந்தோம். கடந்த வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் 100 வீதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் யானை மனிதன் மோதல் தொடர்பாக கடந்த பேசப்பட்டிருந்தன. அதற்காக எமது அரசாங்கத்தின் ஊடாக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதியம் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அநுரவின் நகர்வு வடமாகாணத்தை நோக்கி தான்: கந்தசாமி பிரபு தெரிவிப்பு | Lord Kandasamy S Statement

மேலும், வெல்லாவெளிப் பிரதேசத்திலே யானைப் பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளை வழங்க தயாராக இருக்கின்றோம். வன ஜீவராசிக பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய அதிகாரிகளை நியமிக்கவும், அதிகாரிகள் மட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோதம் மண் அகழ்வு தொடர்பாக நாங்கள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ள அனர்த்த காலத்தில் பாதிக்கப்பட்ட வாய்க்கால்களை திருத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது அறுவடை செய்யப்படுகின்ற நெல் கொள்வனவு தொடர்பாக நாம் அதிக கரிசனை செலுத்தியுள்ளோம்.

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து பழுகாமத்தில் இருந்து களுதாவளைகான புதிய படகு பாதை போக்குவரத்து ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.

கிவுல் ஓயா திட்டம் தொடர்பான குடியேற்றங்கள்

இந்நிலையில், கிவுல் ஓயா திட்டம் என்பது ஒரு குடியேற்றத் திட்டம் இல்லை. அது ஒரு நீர்ப்பாசனத் திட்டமாகும். வடமாகாணத்திற்கு அதிகளவு நீர் தேவைகள் இருக்கின்றன. அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளன. அங்குள்ள பரந்த நிலப்பரப்புகளை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.

அதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் தேவையை சரியான முறையில் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இந்த கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக விவசாயிகள் நன்மை அடையக்கூடிய சூழல் ஏற்படும்.

அநுரவின் நகர்வு வடமாகாணத்தை நோக்கி தான்: கந்தசாமி பிரபு தெரிவிப்பு | Lord Kandasamy S Statement

அதனை நாங்கள் செயற்படுத்த தயாராக இருக்கின்றோம். கடந்த காலங்களில் கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்வதற்கு கொண்டு வந்த திட்டங்களை சட்டவிரோதமான குடியேற்றங்கள் இடம்பெற்று இருந்தன. இன பரம்பலை குழப்பத்திற்கு உள்ளான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எமது அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளை நாங்கள் ஈடுபட மாட்டோம்.

வடபகுதி மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து இருக்கின்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே எந்த ஒரு மாவட்டத்திலும் அது கூடிய பெரும்பான்மையைப் பெற்ற மாவட்டமாக வட மாகாணம் காணப்படுகிறது.

மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு தான்..

அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு தான் கிடைத்திருந்தார்கள். அங்கு அந்த மக்களின் ஆதரவு தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி தான் இருக்கின்றது. அதிகளவு செயறிட்டங்களையும் வடமாகணத்தை நோக்கித் தான் ஜனாதிபதி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

பிரபல பாடசாலையின் சர்ச்சைக்குரிய காணொளி : ஆசிரியைகள் - மாணவனுக்கு கிடைத்த தண்டனை

பிரபல பாடசாலையின் சர்ச்சைக்குரிய காணொளி : ஆசிரியைகள் - மாணவனுக்கு கிடைத்த தண்டனை

இதனால் அப்பகுதியில் பல வீடு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே நல்லதொரு அபிப்பிராயம் ஜனாதிபதி மத்தியில் இருக்கின்றது. ஜனாதிபதியும் அந்த மக்களிடையே சிறந்த ஒரு நம்பிக்கையும் பாசத்தையும் வைத்திருக்கின்றார். வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் எந்தவித வேறுபாடுகளுமின்றி பயிற்சி அளிக்கப்பட்டு மாகாணங்களுக்கு அவர்கள் பகிர்ந்து அளிக்கப்படுவார்கள்.

அநுரவின் நகர்வு வடமாகாணத்தை நோக்கி தான்: கந்தசாமி பிரபு தெரிவிப்பு | Lord Kandasamy S Statement

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து ஆசிரியர் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாதவனை, மைலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதன் முதற்கட்டமாக மகாவலி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான 1400 ஏக்கர் காணியும் வெகு விரைவாக விடுவிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுபோன்று வன இலாகாவிற்குச் சொந்தமான காணியையும் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் கொண்டு இருக்கிறோம்.

வன இலாகா பிரிவு

ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் தரைக்கான தேவையை வெகுவிரைவில் நாம் பூர்த்தி செய்வோம். கடந்த காலத்தைப் போன்று வன இலாகா எந்த ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து அரசு இயந்திரங்களையும் சுதந்திரமாக செயல்படுவதற்கு இடமளித்து இருக்கின்றது. நாங்கள் எந்த ஒரு அரசியல் தலையீடுகளையும் வழங்குவதில்லை.

அநுரவின் நகர்வு வடமாகாணத்தை நோக்கி தான்: கந்தசாமி பிரபு தெரிவிப்பு | Lord Kandasamy S Statement

அதுபோல் வன இலாகா அவர்களுக்கு இருக்கின்ற செயற்பாடுகளை அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தனியாருக்கு சொந்தமான காணியை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வன இலாகா பிரிவு ஈடுபடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுபோன்று வன இலாகா எல்லைகளை நிர்ணயிக்கும் போதும் அப்பிரதேசத்தில் இருக்கின்ற பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகள், விவசாயிகள் அனைவரையும், ஒன்று சேர்த்தாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எந்த ஒரு தவறுகளும் இடம்பெறாது என்பதை நான் ஆணித்தனமாக கூறிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US