ரஷ்யாவை எதிர்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகள் அதிகம் தேவை: உக்ரைன் பிரதமர்
ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ உதவி
மேலும், ஆயுத ஏற்றுமதி கொள்கையில் ஜப்பானின் கட்டுப்பாடுகளை உக்ரைன் புரிந்து கொள்கிறது. எனவே அமெரிக்காவின் புதிய இராணுவ உதவிகளை உக்ரைன் எதிர்பார்க்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகின்ற நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri