யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!
யாழ். மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக நீண்ட வரிசைகள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், தனியாரதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசை
எனினும், மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது.
எரிபொருள் நிரப்பு நில்சியங்கள் வழமைபோன்று செயற்பட்டு எரிபொருள் விநியோகத்தை செற்கொண்டு வருகின்றன.
செயற்கையான தட்டுப்பாடு
செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.” என கூறியுள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் எரிபொருளின் விநியோக தளம்பலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாக அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam