பாதாள உலகக்குழுவின் முக்கிய உறுப்பினரின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் அதிரடியாக முடக்கம்
பாதாள உலகக்குழுவின் முக்கிய உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவான் குமார டி சில்வாவிற்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
இதன்படி, பணப்புழக்கச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, வெலிப்பன்ன பகுதியில் அமைந்துள்ள 15 பேர்ச் காணியும், அதில் கட்டப்பட்டுள்ள இருமாடி வீடும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு - பலத்த பாதுகாப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதிவாதிகள்