இந்திய மக்களவை தேர்தலில் தெரிவான முதலாவது இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்
இந்தியாவின் முதலாவது இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்தை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் சாம்பவி சவுத்ரி பெற்றுள்ளார்.
இதன் மூலம் 25 வயது பெண்ணான சாம்பவி சவுத்ரி இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்
பீகார் மக்களவைத் தேர்தலில் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்ட சாம்பவி சவுத்ரி, 1 இலட்சத்து 87ஆயிரத்து 251 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
3வது தலைமுறை அரசியல்வாதியான சாம்பவி சவுத்ரியின் தாத்தா மஹாவீர் சவுத்ரி காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
அதன்பின் அவரின் தந்தை அசோக் சவுத்ரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.
அவர், தற்போதைய நிதிஸ் குமார் ஆட்சியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |