லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு பாகங்கள் இணைக்கப்பட்ட 'Lexus SUV' காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட கார்
முன்னதாக, குறித்த சொகுசு கார், மிரிஹான, எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத்தகடு இல்லாத நிலையில் ஒக்டோபர் 26ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் 6ஆம் திகதி மீண்டும் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |