தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும்போது லொஹான் உயிருடன் இருக்க வேண்டும் : அனுரகுமார
தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற காலத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வாழவேண்டும் என்பதை தாம் விரும்புவதாக அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தாம்,உயிருடன் இருக்கும் வரை தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என லொஹான் ரத்வத்த கண்டியில் வைத்து அண்மையில் கூறியிருந்தார்.
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
எனினும் தமது கட்சி வெற்றி பெறும்போது அவர் உயிருடன் இருக்கவேண்டும் என்று அனுரகுமார விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் அல்ல என்று கூறிய திஸாநாயக்க, அதனால்தான் நள்ளிரவில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத்துப்பாக்கியுடன் குடிபோதையில் நுழைந்து கைதிகளை பயமுறுத்திய ஒருவர் இன்னும் சுதந்திரமாக இருக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு லொஹான் ரத்வத்தயின் மீதே சுமத்தப்பட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri