பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
பாடசாலை மாணவர்களின் காலணிகளை வாங்குவதற்காக கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
கல்வி அமைச்சும் கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து புதிய திட்டமாக தொடங்கப்பட உள்ள இந்த திட்டம், 250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள், 251-500 மாணவர்களைக் கொண்ட தோட்ட பாடசாலைகள், சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகள் மற்றும் பிரிவேனா பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் சாதாரண மற்றும் துறவிய மாணவர் சமூகத்திற்கு இந்த வாய்ப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வருட உத்தரவாதம்
இந்த திட்டத்திற்கு வியாபார நிலையங்கள் மற்றும் ஆடை நிறுவனம் மேலும் கைத்தொழில் மேம்பாட்டு அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தியாளர்கள் ஒரு வருட உத்தரவாதத்தின் கீழ் தரமான காலணிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் பாடசாலைகளுக்கு நேரடி விற்பனை செய்வதன் மூலம் மாணவர்கள் சரியான அளவிலான காலணிகளைத் தேர்வுசெய்ய முடியும் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சாத்தியக்கூறு ஆய்வுக்குப் பிறகு இந்த திட்டத்தை மற்ற மாகாணங்களிலும் செயல்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |