சர்வதேச நாணய நிதிய நிபந்தனையால் சிக்கலில் மாட்டப் போகும் உள்ளூராட்சி மன்றங்கள்
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனை காரணமாக இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் பிரகாரம் 2028ம் ஆண்டு தொடக்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியை மத்திய அரசாங்கம் நிறுத்தியாக வேண்டும்.
இலங்கை கல்வி ஒன்றியத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சுஜாதா கமகே இதுகுறித்து தெரிவிக்கும் போது, இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஊழியர் சம்பளம், பராமரிப்பு செலவு என்பவற்றுக்காக நிதி வழங்குவதை மத்திய அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு
கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம் இந்த நிபந்தனையை விதித்துள்ளது.
தேசிய வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியானது உள்ளூராட்சி மாகாண சபைகள் ஊடாக அந்தந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படுகின்றது.
மாநகர சபைகள் மற்றும் நகர சபைகளின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்த நிதியிலேயே பெருமளவில் தங்கியுள்ளன.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 2028ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் பாரியளவில் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
