உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஏப்ரலில்! தமிழரசுக்கட்சி திட்டவட்டம்
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் தற்போது உறுதியாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.
தீர்ப்பின் வாசிப்பு
அந்த தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் குறித்த திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் சாணக்கியன் கூறியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது நடைமுறைப்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
