உள்ளுராட்சி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனை : அனுரகுமார
எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
அத்துடன் நாடு செல்லும் பாதையில் ஒரு புதிய திசையாகவும் அமையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (2.01.2023) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

திருப்புமுனை
இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக உள்ளூராட்சித் தேர்தலை மாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்ட நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

ஒரு தேர்தலை நடத்துவதில் ஐந்து நிலைகள் மட்டுமே உள்ளன.
நீதிமன்ற தீர்ப்பு
இதில் தேர்தல் அறிவிப்பது, கட்டுப்பணத்தை பெறுவது, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்வது, தேர்தல் திகதியை அறிவித்து தேர்தல் நடத்துவது என்ற நான்கு கட்டங்களையும் சீர்குலைக்க அரசாங்கம் முயன்றது, ஆனால் அவை வெற்றிகரமாக தோல்வியடைந்தன.

தற்போது ஒரே ஒரு நிலை மட்டுமே உள்ளது. பெப்ரவரி 10-ம் திகதி வெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பே அதுவாகும்.
இந்தநிலையில், தேர்தலை நிறுத்துவதற்கு நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் வழங்காது
என்று தாம் நம்புவதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri