உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80672 பேர் போட்டி! வெளியான தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,672 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகவும், சுயேட்சை குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 7530 பேர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் முல்லைதீவு மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவோர்
முல்லைத்தீவு மாட்டவத்தில் 592 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 726 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3268 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 3788 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 3162 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 2752 பேரும், நுவெரெலியா மாவட்டத்தில் 2489 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 4122 பேரும், மன்னார் மாவட்டத்தில் 827 பேரும், வவுனியா மாவட்டத்தில் 1597 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 7177 பேரும், கண்டி மாவட்டத்தில் 6297 பேரும் என மொத்தமாக 80672 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 12 மணி நேரம் முன்

ஞானத்தை ஜெயிலுக்கு போக வைத்துவிட்டு குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
