தேசிய மக்கள் சக்தியின் சர்ச்சைக்குரிய துண்டுப்பிரசுரம் : வலுக்கும் எதிர்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன(Rohini Kaviratna), தேர்தல் ஆணையகச் செயலாளருக்கும், மாத்தளை மாவட்ட உதவி ஆணையாளருக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஆளும், தேசிய மக்கள் சக்தி விநியோகித்த துண்டுப் பிரசுரம் குறித்து அவர் முறையிட்டுள்ளார்.
அதில், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் நிர்வாகத்துக்குள் வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ரோஹினி கவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்திற்குப் புறம்பான கொள்கை
எனவே இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தை நிறுத்துமாறு அவர் ஆணையகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், அண்மையில் இதுபோன்ற கருத்தை முன்வைத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், குறிப்பிட்ட துண்டுப்பிரசுரம் சந்தேகத்திற்கு இடமின்றி மக்களின் வாக்குரிமையைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ரோஹினி கவிரத்ன, எதிர்க்கட்சியால் நடத்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைத் தடுப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பான ஒரு கொள்கையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.





அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

சீனா, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி... துருக்கி உருவாக்கும் கொடிய ஆயுதம்: இந்தியாவிற்கு கெட்ட செய்தி News Lankasri
