தேர்தல் ஒத்தி வைப்பு தொடர்பில் விவாதம் வழங்க முடியாது
தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஆளும் கட்சியின் அறிவிப்பு

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் கட்சி அறிவித்துள்ளது.
தேர்தல் ஒத்தி வைப்பு குறித்து நாடாளுமன்ற விவாதமொன்றை நடாத்துவது குறித்து இன்றைய தினம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தல் ஒத்திவைப்பு குறித்து ஒருநாள் விவாதம் நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல, சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு அமையவே இன்றைய தினம் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri