தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார கூறியுள்ளார்.
தபால் வாக்குச் சீட்டுகள்
அத்தோடு, தபால் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தபால் வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam