நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளை மூடுவதற்கு கலால் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1913 என்ற இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
இதேவேளை கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் குறித்த இலக்கம் 24 மணிநேரமும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் ஏப்ரல் (13) மற்றும் (14) ஆகிய இரு தினங்களில் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நாட்களில், சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மதுபானம் வழங்க முடியும் என்றும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.