உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! மஹிந்த தேசப்பிரிய
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாருக்காவது கொலை மிரட்டல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், உங்களில் யாருக்காவது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டால் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
அண்மைக்காலங்களில் இறந்தவர்களில் பலர் தங்களுக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியிருந்தார்கள்.
அவர்கள் ஏதாவது தகராறுகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது. அவ்வாறான உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் இலங்கையை விட்டு வெளியேறலாம் அல்லது வீடுகளை விட்டும் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
