லிட்ரோ லங்கா நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
எதிர்வரும் நாட்களில் சந்தைக்கு தடையில்லா எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் லிட்ரோ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் தினமும் 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் எனவும், தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெரவலப்பிட்டிய முத்துராஜவெலவில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விநியோக முனையத்தில் எல்.பி எரிவாயு விநியோகம் இரவு 9.00 மணியளவில் தொடர்ந்துள்ளது. இன்று சந்தைக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், லிட்ரோ லங்கா நிறுவனம் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், அவ்வாறு தொடர்ந்தால், எதிர்காலத்தில் அதை மூட நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் சந்தை விலைகள் உலக சந்தையில் உள்ள விலைகளுடன் ஒத்துப் போகாததே இதற்குக் காரணம் என்று லிட்ரோ லங்கா நிறுவனத்தின் விளம்பர மேலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலக சந்தை விலையை வைத்து பார்த்தால், நிறுவனம் சிலிண்டர் ஒன்றுக்கு 2,000 ரூபா நட்டத்தை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார். இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள எரிவாயு விநியோக மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.