லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
அக்டோபர் 27ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சந்தையில் அதிகரித்து வரும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் விநியோக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கொண்டுவரப்படும் எரிவாயு
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், சந்தையில் நிலவும் அதிக தேவையையும் நுகர்வோரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அக்டோபர் 22ஆம் திகதி வந்தடைந்த சரக்குக்கு மேலதிகமாக, 'குட்வில்' (GOODWIL) என்ற கப்பல் மூலம் மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு நேற்று (அக்டோபர் 24) இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு எரிவாயு சரக்கு நாளை (அக்டோபர் 26) நாட்டிற்கு வரவுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 22ஆம் திகதி வந்தடைந்த 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட 350,000 எரிவாயு சிலிண்டர்கள், அக்டோபர் 23, 24 மற்றும் இன்று (அக்டோபர் 25) ஆகிய நாட்களில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை
விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், வீட்டு உபயோக எரிவாயுவின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த விநியோகங்கள் இடம்பெறுகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், வரும் நாட்களில் நுகர்வோர் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சந்தையில் வீட்டு உபயோக எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam