லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளைய தினம் (04.08.2023) விலை அதிகரிப்பு அறிவிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இலங்கையிலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பிரீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை
ஒரு மெட்ரிக் தொன் எடையுடைய சமையல் எரிவாயுவின் உலக சந்தை விலை 85 டொலர்களால் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாளைய தினம் சமையல் எரிவாயு விலை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் லிட்ரோ நிறுவனம் விலை மாற்றம் தொடர்பில் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
