வெடித்துச் சிதறும் எரிவாயு கொள்கலன்கள்! லிட்ரோ நிறுவனம் வழங்கும் விளக்கம்
தற்போது, சந்தையில் கிடைக்கும் எரிவாயு கலவை மாற்றப்படவில்லை என லிட்ரோா எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புக்களுக்கு எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று சில தரப்பினர் கருத்து வெளியிட்டாலும் லிட்ரோ தனது எரிவாயு கலவையில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளர் இந்திரசிறி விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 18 லீட்டர் சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் எரிவாயு கலவையில் மாற்றத்துடன் நுகர்வோருக்கு வெளியிடப்பட்டது.
புதிய தலைவர் ஜூலை 28ஆம் தேதி பதவியேற்ற பிறகு, அந்த 18 லிட்டர் சிலிண்டர்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஏப்ரலில் சந்தைக்கு விநியோகித்த போது எரிவாயு கலவை 50 க்கு 50 ஆக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
