சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு செவி சாயுங்கள்! - ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை
சுகாதார அமைசசரின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறு ஜே.வி.பி கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“கோவிட் நோய்த் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்போரின் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளும் போது தற்போதைய கோவிட் தடுப்பு செயலணியின் நடவடிக்கைகள் குறித்து எந்த வகையிலும் திருப்தி கொள்ள முடியாது.
துரதிஸ்டவசமாக கோவிட் தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் கடமையாற்றிய நிபுணர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டனர். கோவிட் நான்காம் அலை தாக்கும் போது ஜனாதிபதிக்கு எஞ்சியிருப்பது இராணுவத் தளபதியும், புலனாய்வுப் பிரிவு பிரதானியும் மட்டுமேயாகும்.
இந்த நாட்டின் நிபுணத்துவ மருத்துவர்கள் கூறுவதனை உங்களால் கேட்க முடியாவிட்டால் தயவு செய்து சுகாதார அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சரின் கோரிக்கைகளுக்கேனும் செவி சாய்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
