ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணை: அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை
உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்துள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது.
இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்' கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.
இது தொடர்பாக விண்வெளி நிறுவன பொது இயக்குனர் யூரி போரிசோவ் தெரிவிக்கையில், சர்மட் ஏவுகணைகள் தனது பணியை செய்வதற்கான கடமையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன சர்மட் ஏவுகணைகள் இராணுவ படையில் இணைக்கப்பட்டுள்ளது. அவை பன்டுத்துவதற்கு தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
அணுசக்தி தாக்குதல் விருப்பம்
இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஊடகங்கள் கூறும்போது, சர்மட் ஏவுகணைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கை அமெரிக்காவுக்கும், நேட்டோவுக்கும், ரஷ்யா தனது அணுசக்தி தாக்குதல் விருப்பம் இன்னும் மேசையில் உள்ளது என்ற செய்தியை அனுப்புகிறது என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சர்மட் ஏவுகணை குறித்து ரஷ்யா அதிபர் புடின் கூறும்போது, இந்த ஏவுகணைகள், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடும் முன் உலகையும் எதிரிகளையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும் என்று கூறியிருந்தார்.
நவீன தொழில்நுட்பங்களை கொண்ட சர்மட் ஏவுகணை அதிபயங்கரமானவை என்று கருதப்படுகிறது.
தற்போது சர்மட் ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.