கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட மதுபானசாலை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்ட மதுபான வீதி ஸ்ரீயை திறப்பதற்கு நிரந்தர தடை உத்தரவை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பகுதியில் முழங்காவில் விநாயகர் ஆலயம் பாடசாலை ஆசிரியர் விடுதி, பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபானசாலையொன்று அமைக்கப்பட்டுத் திறக்க முற்பட்ட சமயம் பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொதுத் தொல்லை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து முழங்காவில் பொலிஸாரால் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது.
தடை உத்தரவு பிறப்பிக்குமாறு விண்ணப்பம்
குறித்த வழக்கானது கடந்த (06-07-2023) விசதரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொது அமைப்புகள் மற்றும் முறைப்டாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டத்தரணி எஸ்.விஜயராணி உள்ளிட்டோர் முன்னிலையாகியுள்ளனர்.
அவர்களுடன், பூனகரி பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரும் முன்னிலையாகி குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலை மற்றும் அருகில் இருக்கின்ற மிகப் பழமையான ஆலயம் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இது அமைந்திருப்பதனால் இதனைத் திறப்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
மதுபானசாலைக்கான அனுமதி
மேற்படி விடயங்களைக் கருத்தில் எடுத்த இன்று வரை (20-07-2023) அதனைத் திறப்பதற்கெதிரான இடைக்கால தடையுத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்றைய (20-07-2023) தினம் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மதுபானசாலைக்கான அனுமதி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டாலும் குறித்த மதுபான சாலை அமைந்துள்ள சூழல் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்த மன்று அதனைத் திறப்பதற்கெதிரான நிரந்தர தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |