நட்டாங்கண்டலில் மதுபான வியாபாரி கைது(Photo)
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் அதிகளவு மதுபான போத்தல்களை உடமையில் வைத்திருந்து விநியோகித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் .எம்.எஸ். ரத்னநாயகவுக்கு நட்டாங்கண்டல் பொலிஸ்நிலைய விசேட புலனாய்வு பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதாகிய குறித்த சந்தேக நபரிடம் இருந்து 62 விகர் ரின்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் புதன்கிழமை ( 16.03.2022) மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
