புத்தளம் வழித்தடத்தில் மாதம்பை வரை மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவை
புத்தளம் வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் மாதம்பை தொடருந்து நிலையம் வரை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வழித்தடத்தில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடருந்து ஒன்று சிலாபம் தொடருந்து நிலையத்திற்குள் நுழையும்போது தடம் புரண்டுள்ளது.
தடம்புரண்ட தொடருந்து
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து நேற்றுக் காலை 9.30 மணிக்கு சிலாபத்துக்குப் புறப்பட்ட புகையிரதமே நண்பகல் 12.30 மணியளவில் சிலாபம் தொடருந்து நிலையத்தில் தடம்புரண்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் காரணமாக, புத்தளம் வழித்தடத்தில் அனைத்து தொடருந்துகளும் தற்காலிகமாக கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பை வரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடம்புரண்ட தொடருந்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றுவதற்கான செயற்பாடுகளை புகையிரத திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.