மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவை: வெளியான காரணம்
நாடளாவிய ரீதியில் இன்று 1,500 முதல் 2,000 வரையான தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“நேற்று எங்களுக்கு பல பேருந்து டிப்போக்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
எரிபொருள்

இன்று போதுமான அளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும்.
குறைந்தது 25 சதவீத பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
வரிசையில் பேருந்துகள்

கடந்த 3, 4 நாட்களுக்கு மேலாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போ
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக தனியார் பேருந்துகள் வரிசைகளில்
காத்திருக்கின்றன" என கூறியுள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan