அரசியல் நிகழ்வுக்குப் பதில் ஆன்மீக நிகழ்வு! நாமலின் மனைவி லிமினியின் புதிய தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச, எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெறவுள்ளது.
இதற்கிடையே குறித்த நிகழ்வில் தலைமை வகிக்கவிருந்த நாமல் ராஜபக்ச தற்போதைக்கு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் இருக்கும் காரணத்தினால் அவரது மனைவி லிமினி ராஜபக்ச, தன் கணவருக்குப் பதிலாக அரசியல் மேடையேற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
சமய வழிபாடுகள்
இந்நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் இருந்து எதிர்கொள்ள நேர்ந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதி லிமினி அரசியல் மேடையில் ஏறமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாமல் மற்றும் லிமினியின் திருமண ஆண்டு விழாவும் செப்டம்பர் 12ஆம் திகதியே இடம்பெறுவதால், அன்றைய தினம் அவர் அநுராதபுரத்தில் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்சவுக்குப்பதிலாக அநுராதபுர பேரணியின் மேடையில் லிமினி உரையாற்றுவார் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய புதிய தகவல்களின்படி, அவர் அந்த மேடைக்கு வருகை தந்து உரையாற்றவோ, பொதுமக்களைச் சந்திக்கவோ மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri