தந்தையைப் போன்று சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும்! புதிய நிதி அமைச்சர் பசிலின் அதிரடி அறிவிப்பு
தந்தையைப் போன்று சில கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நிதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பிரபல்யமற்ற சில தீர்மானங்களை எடுக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சில வேளைகளில் தந்தையைப் போன்று கடுமையான தீர்மானங்களையும் எடுக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்துமே மக்களுக்கான தீர்மானங்கள் எனக் கருத்தி அவற்றை அனைவரும் தாங்கிக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் பொறுப்புக்கள் மிகவும் சவால் மிக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சின் பணிகளை முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் தேவைகள் தெரியும் எனவும் அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.