மின்னல்தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழப்பு! விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு 03 ஆம் கண்டம் வயல்வெளிப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மூவர் நேற்று (15)மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று மாலைவேளை முல்லைத்தீவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வந்துள்ளது.
குமுழமுனை மேற்கு 07ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 33 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை கிழக்கினை சேர்ந்த 30 வயதுடைய வன்னியசிங்கம் யுகந்தன், வற்றாப்பளை கிராமத்தினை சேர்ந்த 42 வயதுடைய யோகலிங்கம் சுஜீபாகரன் ஆகியோர் இடிமின்னல் தாக்கத்தின் போது வயல் கொட்டிலில் நின்றவேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இன்று (16)சம்பவ இடத்திற்கு விரைந்த தடையவியல் பொலிசார்
சட்டவைத்திய அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி
ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலங்கள் பிரேத
பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு
உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
