தமிழ் அரசு கட்சி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்! (video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (30.01.2023) ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.
திடீர் மரணவிசாரணை அதிகாரியும், அகில இலங்கை சமாதன நீதவானுமாகிய அற்புதம் சற்குணதாஸ், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொலை அச்சுறுத்தல்கள்
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புனிதவளன் நகர் வட்டாரத்தில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
தான் தேர்தலில் போட்டியிடுவது பல கட்சியினருக்கு விருப்பமில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது. அதனால் தன்மீது கொலை அச்சுறுத்தல்கள் வந்தவண்ணமுள்ளன.
1970 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழ்தேசியத்தினை நேசித்தவன் அன்றில் இருந்து இன்றுவரை இலங்கை தமிழ்அரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் பயணித்தவன்.
கொலை மிரட்டல்
தேர்தல் வேட்பாளராக அறிமுகமான பின்னர் கடந்த 25 ஆம் நாள்வரை தொலைபேசியில் இரண்டு தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
வெளியில் வந்தால் கொலை செய்வோம் என்று தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்கள்.
அவர்களின் தேல்வி பயம் காரணமாக இந்த மிரட்டல்களை அவர்கள் விடுகின்றார்கள். இந்த
மிரட்டல் தொடர்பில் கடந்த 25.01.2023 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

கும்பமேளாவுக்கு கணவரால் வர முடியாததால்.., Video call செய்து தண்ணீரில் போனை முக்கி எடுத்த மனைவி News Lankasri
