உலகத் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்த உறுதியேற்போம்!

mullivaikkal Thol.Thirumavalavan
By Benat May 18, 2021 11:00 AM GMT
Report

 ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறதியேற்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தம் நிறைவுற்று இன்றுடன் 12 வருடங்கள் நிறைவடைகின்றன.

அந்த துன்ப வரலாற்றில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளர்.

குறித்த அறிக்கையில்,

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது.

மேதகு பிரபாகரன் தலைமையிலான புலிப்படையினரைப் பயங்கரவாத அமைப்பினர் என முத்திரைக்குத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் பெயரில் அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தைத் தீட்டி, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற ஏராளமான நாடுகளின் உதவியோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றினர்.

ஏறத்தாழ 22 நாடுகள் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளுக்கு எதிராக நேர்முகாகவோ மறைமுகமாகவோ அதில் பங்கேற்றன. அதாவது, அரசு சார்பில்லாதவொரு மக்கள் அமைப்புக்கு எதிராக, 22 அரசுகள் அனைத்து வகையான படைவலிமையுடன் போர்க்களத்தில் மோதின.

போர்மரபுகள் எதனையும் பின்பற்றாமல் நச்சுக் குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசி ,புலிகள் அல்லாத பொதுமக்களையும் அழித்தொழித்தனர்.

இது பங்கரவாத ஒழிப்பு என்னும் பெயரில் ஏகாதிபத்திய நாடுகளால் அரங்கேற்றப்பட்ட இனஅழிப்புப் போராகும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய இனவிடுதலை இயக்கம் என அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக பயங்கரவாத இயக்கமென்று உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் நசுக்கப்படுவதற்குப் புலிகளுக்கு எதிரான இந்த உத்தியே சிங்களவர்களுக்கு மிகப் பெருமளவில் கைக் கொடுத்தது.

அமெரிக்க இரட்டைக் கோபுர இடிப்புக்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாத ஒழிப்பை முன்னிறுத்தி உலகநாடுகளை ஒருங்கிணைப்பது அமெரிக்காவுக்கு இலகுவாக அமைந்துவிட்டது.

அதுவே சிங்களவர்களுக்கும் ஏதுவாக அமைந்தது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்கள் என்னும் பெயரில் இந்திய ஆட்சியாளர்கள், சிங்களவர்களுக்குத் துணையாக தோள்கொடுத்து நின்றனர்.

அமெரிக்காவின் அடிவருடி நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டன. ஈழத்தமிழர் சிக்கலானது, சர்வதேச சமூகத்தின் பிடிக்குள் போய்விட்டதால், ஐநா பேரவையும் அந்தப் பேரவலத்தைக் கடைசி வரையில் வேடிக்கை பார்க்கவே செய்தது. குறிப்பாக, ஐநா மனித உரிமை அமைப்பு அந்தப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த தவறி விட்டது.

இனக்கொலைக் குற்றவாளிகளான இராஜபக்‌ஷே கும்பலை சர்வதேக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்துத் தண்டிப்பதற்கு இதுநாள் வரையிலும் ஐநாபேரவை பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிங்கள அரசின் நட்பைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டிவருகின்றன.

இந்நிலையில்,சர்வதேசக் குற்றவாளிகளான இராஜபக்‌ஷ கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டதால் ஈழத்தமிழர்களின் தாயகத்தை அனைத்து வகையிலும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களக் குடியேற்றம் போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

அத்துடன், யாழ் பல்கலைக் கழக வளாகத்திலும் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நிறுவப் பட்டிருந்த நினைவுச் சின்னங்களைச் சிங்களப்படையினர் தகர்த்தெறிந்துள்ளனர். இன அழித்தொழிப்பு மட்டுமின்றி ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டச் சுவடுகளை அழிப்பதிலும் குறியாக உள்ளனர்.

சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இத்தகைய மேலாதிக்கப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினவுகூரப்படும் இந்நாளில், ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறதியேற்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US