அநுர தரப்புக்கு அபாய எச்சரிக்கையாக மாறியுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவு
தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருப்பது ஒரு அபாய எச்சரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
Despite the mess created by Local Government Elections Act and accompanying arithmetic jargon , those who have won the largest number of the wards must be given an opportunity to govern .
— M U M Ali Sabry (@alisabrypc) May 7, 2025
That’s the voice of the people!
ஊடகக் கண்காட்சி
ஊடகக் கண்காட்சியை' நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.
சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள். காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.
அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவு
அன்றேல் இதுவும் வெறுமனே 'நல்லாட்சி அரசாங்கம் - 2' ஆக மாறிவிடும். இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ச18 மாதங்களில் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.
எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
