மன்னார் மாவட்டத்தின் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Mannar Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Ashik Dec 20, 2023 03:06 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்றையதினம் (20.12.2023) அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதி என்பது சாதாரண தரைத்தோற்றத்தில் இருந்து மிகவும் குறைவான தாழ்நிலப் பிரதேசம் ஆகும்.

வலிமை குறைந்த கனதியற்ற நொதியமுள்ள தீவு என்பதால் தான் மூன்று மாடிக்கு மேல் கட்டிடம் அமைப்பதற்கு மன்னார் தீவு பகுதியில் அனுமதி வழங்கப்படுவதில்லை.

காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

சீர்குலையும் இயற்கை ஒழுங்கமைப்பு

ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என ஏலவே யுனெஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.

அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் காற்றாலை அமைப்பதும் மற்றும் கனிய மணல் அகழ்வது போன்ற நடவடிக்கைகள் மேலும் தீவு பிரதேசத்தை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும்.

மன்னார் மாவட்டத்தின் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் | Letter To President About Mannar S Windmill

உலகம் முழுவதும் மனிதர்களின் இயற்கைக்கு எதிரான செயற்பாடு காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் பேரிடர் மூலம் கடல் நீர் மட்டம் உயரலாம் என்றும் அதனால் பல தீவுகள் காணாமல் போகலாம் என்றும் அறிவியலாளர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

டுபாய் காலநிலை மாநாட்டில் தாங்களும் பங்கேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு, சுனாமி, பெரு வெள்ளம் போன்ற இயற்கை இடர்கள் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையில் வலிமை இழக்கவைக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

காற்றாலையும் கனிய மணல் அகழ்வும் ஆழமாக துளையிட்டு நிலத்தடியை அதன் இயற்கை தரைத்தோற்ற இருப்பியல் ஒழுங்கமைப்பை சீர்குலைக்கும் வேலையே நடைபெறுகிறது.

நாட்டிற்கே ஆபத்து

இத்தகைய செயற்பாடுகள் இங்கு மிக நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பெரும் வாழ்வியல் கேடாக மாறும்.

இயற்கையை அழித்து இயல்பை மாற்றி பணம் தேட முயல்வது தற்கொலைக்குச் சமமானது என்பதோடு இங்கு வாழும் மக்களைப் பற்றிய எந்த விதமான நோக்கு நிலையும் இல்லாமல் ஆதாயம் தேட நினைப்பது அரசியல் இழுக்காகும்.

மன்னார் மாவட்டத்தின் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் | Letter To President About Mannar S Windmill

எனவே காலப்போக்கில் மன்னார் தீவு பகுதியில் இருந்து மனிதர்களை அப்புறப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே நாம் இதனை நோக்க வேண்டியுள்ளது.

வருமானத்தை மட்டும் நோக்காகக் கொண்டு பல்தேசிய கம்பனிகளுக்கு மன்னார் வளத்தை கூறு போட்டு பெரு வணிகர்களிடம் கை அளித்திருப்பது நாட்டிற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

மேலும், பூகோள ரீதியாக இந்த நாட்டின் மீது பிராந்திய வல்லரசுகளின் கழுகுப் பார்வைக்குள் அகப்பட்டிருப்பதாலும் வரலாற்று முக்கியத்துவ துறைமுக கட்டமைப்பைக் கொண்டதுமான இந்த தீவு எதிர்காலத்தில் நாட்டின் ஏகபோகத்துவத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கடிதத்தின் பிரதி

இந்த யதார்த்தங்கள் தங்களுக்குப் புரியாமல் அல்ல. ஆகவே கனியவள அகழ்வை முழுமையாக நிறுத்துவதுடன் புதிதாக அமைக்க இருக்கும் காற்றாலையை மன்னார் தீவுக்கு வெளியில் எவருக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நிறுவலாம்.

எனவே, பொதுமக்களின் உணர்வுபூர்வமான தத்துவார்த்த அடிப்படை இருப்பியல் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை அறிவியல், சமூகவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.

மன்னார் மாவட்டத்தின் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் | Letter To President About Mannar S Windmill

இல்லையேல் பொதுமக்கள் தமது ஜனநாயக வழி எதிர்ப்பை இடைவிடாது வெளிப்படுத்துவார்கள். மக்களிடமுள்ள நீதி பூர்வமான வாழ்வியல் உரிமை சமூக சமநீதி கோட்பாட்டை ஏற்றுணர்ந்து கொள்வீர்கள் என்றும் எமது நியாயமான வேண்டுகையை நிராகரிக்க மாட்டீர்கள் என்றும் நம்புகின்றோம். என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரபல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

யாழில் பிரபல பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

பெண்ணொருவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் முயற்சி (Video)

பெண்ணொருவரின் காரை பின்தொடர்ந்து தாக்குதல் முயற்சி (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US