லசந்தவால் பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.. பொலிஸ் மா அதிபர் கூறும் தகவல்!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, கடந்த 22.10.2025 அன்று பிரதேச சபை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்வாறிருக்க, அவர் தனக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
உரிய நடவடிக்கை
குறித்த கடிதத்தை அவர், 06.09.2025 அன்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, அந்தக் கடிதம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் 12.09.2025 அன்று தென் மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தென் மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் குறித்த கடிதத்தை மாத்தறை ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |