கிண்ணியாவில் முடக்கப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள் - தவிசாளர் கடிதம்
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் முடக்கப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளும் 18 நாட்களைக் கடந்துள்ளதால் 12கிராம பிரிவுகளின் முடக்கத்தைத் தளர்த்துமாறு உரியவர்களைக் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் என்ற முறையில் எழுத்து மூலமாகவும் மற்றும், தொலைநகல் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து மூலமாக இன்று (01) அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தினால் முடக்கப் பட்ட பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என்பதால் 7 நாட்கள், 14 நாட்கள் என்ற கால அடிப்படையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியாவில் இவ்வாறு முடக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 12 இன்னும் விடுவிக்கப்படாததால் கிண்ணியா இன்னும் அச்சுறுத்தல் கூடிய பகுதி என்ற தோற்றப்பாட்டை வெளியே உள்ள மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதுடன், முடக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் தொழில் அற்ற நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பதால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இப்போது கிண்ணியா மக்கள் முடக்கம், பயணத்தடை என இருவகையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர்.நாடு முழுவதும் பயணத்தடை இருக்கும் போது முடக்கப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகளையும் தளர்த்த முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.
அவற்றை இன்னும் நீடிப்பதற்கு இன்னும் நியாயமான காரணங்கள் இருப்பதாக என்னால்
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது என
குறிப்பிடப்பட்டுள்ளது.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 19 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
