இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஹர்சன் டி சில்வாவுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரான ஹர்சன் டி சில்வா, இன்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு நுகேகொட ரத்தனபிட்டிய தொடக்கம் பெல்லன்வில வரையான வேரன்ஸ் கங்கை செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நிதி சட்டங்கள்
குறித்த நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவத்துக்காக நிதி சட்டங்களை மீறி சுமார் 276 லட்சம் ரூபாவை செலவிட்டமை தொடர்பிலேயே ஹர்சன் டி சில்வா இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் அவர் முன்னெடுக்கப்பட்ட போது , இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஹர்சன் டி சில்வாவை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |