தமிழ் தலைவர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறும் கனடா - பிரம்டன் மேயரின் செய்தி
ஈழத்தமிழர்கள், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தயார்படு்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கிடையில், கனடா - பிரம்டன் பகுதியின் மேயர் பெட்ரிக் ப்ரவுனால் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் அரச சார்ந்தோரால் எழுப்பப்பட்டு வருகின்றன.
அழியா கண்ணீரோடும் பல நாட்கள் எதிர்பார்ப்போடும் ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தயார்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் கனடாவின் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் பேசுபொருளாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டருடனான ஊடறுப்பு,

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |