கரி ஆனந்தசங்கரிக்கு மனோ, சுமந்திரன் வாழ்த்து!
கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் அரசின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த செவ்வாய்கிழமை ஒட்டாவா நகரில் நடைபெற்றது.
அதன்படி கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராக இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட கரி ஆனந்தசங்கரி பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி
அவரை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, "சகோதரரே, வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள்.
சிறப்பாகச் செய்வீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். நாம் தொடர்பில் இருப்போம்." என வாழ்த்துக் கூறியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவரது முகப்புத்தக்த்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, பொதுப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
