வவுனியாவில் வாகனம் மோதி ஒருவர் மரணம்
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் 32 வயதுடைய கண்ணதாசன் திவியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீதியின் மறு திசைக்கு மாற முற்பட்ட மோட்டார் சைக்கிள மீது விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதோடு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதுண்டது.
வாகன விபத்து
இதன்போது மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் மோட்டார் சைக்கிளின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
